யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கற்களின் காவியம் - எல்லோரா - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, டிசம்பர் 09, 2007
மேலும் சில எல்லோரவின் மிக அழகான சிலைகளை பற்றிய படங்களும் குறிப்புகளையும் பதிவதாக சொல்லியிருந்தேன், இதோ அதன் தொடர்ச்சி ....

பகுதி ஒன்று - 1 இங்கே

இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும் குறைவில்லாதது. சென்ற சிலையில் இருந்த சூழலில் மூன்றே கதாபாத்திரங்கள் தான், ஆனால் இங்கே பலர் இருப்பதால், நிகழ்வை காட்ட வந்த கலைஞனுக்கு நுணுக்கமாய் பார்த்து பார்த்து வடிக்க எத்தனையோ விடய௩கள் இருக்கின்றன ... நாங்கள் கவனித்தவற்றை பார்ப்போம்....

சூழல்:
சிவனும், ஷக்தியும் கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருவரின் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, இராவணன் சிவனின் மேல் கொண்ட அதீத பக்தியால் சிவனை கயிலை மலையோடு இலங்கை கொண்டு செல்ல முயற்சிக்கிறான். ஷக்தி பயப்பட, சிவன் தன் ஒர்றைக்காலால் மலையை அழுத்த இராவணனால் பாரத்தை தாங்க இயலாமல் தவிக்கின்றான்.

விபரங்கள்:
மேலிருந்து வருவோம் ...

இராவணன் கயிலையை அசைத்தும், பயந்த சில சிவகணங்கள் சிவனை வணங்குவதும், பலர் கீழே இராவணனுக்கு நிகழ்ந்திருப்பதை கண்டு வியந்து சிரிப்பதும் என சிலையில் மேலே உள்ளன ..

சில பூதகணங்கள் நடக்கும் செயலை கண்டு வியந்து போய் நெஞ்சில் கைவைத்து வியப்பை தெரிவிப்பதும் ...

ஷக்தி பயன்திருப்பதும், அவரை அமைதிப்படுத்த சிவன் ஷக்த்தியை அணைத்துக்கொண்டு தன் பக்கம் இழுத்துக்கொள்வதும்..

சிவனின் வலது கால் கிழே அழுத்தியிருப்பதை போல் தோற்றம் கொடுப்பதும்

பாரம் தாங்காத இராவணன் முகத்தில் உள்ள வலி தத்ரூபமாய் இருந்தது, மேலும் கூடின எடையை தாங்க இயலாமல் அவன் கழுத்து திரும்பி முகம் முதுகுப்பக்கம் வந்திருப்பதையும் காணலாம்

ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..



ராவணனின் இடதும் வலதும் உள்ளது ஷக்தியின் பூதகணங்கள்..

சில பூதகணங்கள் ராவணனின் நிலை கண்டு எள்ளி நகையாடுவதும் ॥ குறிப்பாய் ராவணனின் நீட்டியிருக்கும் வலது காலின் அருகில் இருக்கும் பூதகனத்தின் முகத்திலும் , கைக்குரிப்பிலும், முகம் சுழித்து நாக்கை துருத்தி கிண்டல் பண்ணுவது தெளிவாய் தெரியுது .....

அந்த பூதகனத்திற்கு மேல் உள்ளதுகள் ராவணனின் மேல் கற்களை வீசுவதும்,

அதற்கு பின் புறம் இருப்பவன் கையில் பாம்பை வைத்து ராவணனை பயமுறுத்திவிலக்க முயற்சிப்பதும் (இதை இரண்டாவது படத்தில் காணலாம்)


Shivas poothaganas laughing and teasing at raavana, originally uploaded by யாத்திரீகன்

ராவணனின் இடது புறமுள்ள பூதகணங்களில் ஒன்று, திரும்பிக்கொண்டு , தன் ஆடையை விலக்கி , பின்புறத்தை காட்டி அவனை அவமானப்படுத்துகின்றது॥ :-)

அதற்கு அடுத்து உள்ளது கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு ராவணனை அடிக்க, அதற்கு பின்புறமுள்ளதுகள் சங்கு, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உரக்க வாசித்து ராவணனை பயமுறுத்த முயற்சிக்கின்றன ...


சிலையின் உயரம், ருத்ர தாண்டவத்தின் உயரத்தை போலவே பிரமாண்டத்துக்கு குறைச்சலில்லை

இப்படி அசந்து போகச்செய்த படைப்புகளின் வரிசையில் ஒன்று இந்த சிலை ....

அடுத்து பார்க்க போவது, எங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு நிகழ்வுக்கான சிலை :-)

16 மறுமொழிகள்:

காட்டாறு சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 09, 2007 10:26:00 PM

யாத்திரீகன், உங்கள் பதிவை தவறாது படித்து வருகிறேன்... என்னை கவர்ந்தவை உங்கள் பயணங்கள் மட்டுமல்ல... அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் தான். எல்லோராவின் அழகை கேள்விப் படாதவர்கள் மிகச் சிலரே. கதையும் சேர்ந்து இருக்கிறது உங்கள் பதிவில். மேலும் எழுதவும்.

CVR சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 09, 2007 11:02:00 PM

அழகான பதிவு!
சிவன் தனது வலது காலை அழுத்தினாலும்,ராவணன் இடது புறம் சாய்ந்திருப்பது போல் உள்ளதே?? :-)

சிலையை ரசித்து வடித்திருப்பதை போல்,நீங்களும் ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.
எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்!!
வாழ்த்துக்கள்!! :-)

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 09, 2007 11:03:00 PM

நன்றி காட்டாறு,
தொடர்ந்து படித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை மட்டுமல்ல .. ஊக்கத்தையும் கொடுக்கின்றது ..

அஜந்தா குகையின் வண்ண ஓவியங்கள் பற்றி மூன்று பதிவு போட்டும் யாரும் படிபதாய் தெரியவில்லை என்று வெறுத்துப்போய் நான்காவது பதிவை சேர்த்து வைத்திருந்த புகைப்படங்களோடு மட்டுமே பதித்து விட்டு பல நாள் வலைப்பதிவு பக்கமே வராமல் இருந்தேன் ..

யார் படிக்காவிட்டால் என்ன, எனக்கான திருப்தி என திரும்பி பதிய தொடங்கி இருக்கின்றேன் ... :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 10:58:00 AM

சி.வி.ர்... நல்ல கேள்வி .. புகைபடக்களைஞன் என்று நிருபிச்சிட்டீங்க ... நுணுக்கமாய் கவனித்து.. :-) ... உங்கள் கேள்வி-க்கு அளித்த பதிலை .. அதற்கான பதிவு வரும்போது மற்றவர்களுக்கும் விளக்கலாமா ? ... அதற்குள் வேறு யாரும் நமக்கு தெரியாத பதிலை சொல்கிறார்களா என பார்ப்போமே :-)

Dreamzz சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 6:52:00 PM

Wow! Dint know u were doing such a great job here dude! this rocks! keep posting!

Dreamzz சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 6:54:00 PM

padangalum alithu irukkum vilakkamum superu!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 8:44:00 PM

நன்றி டிரீம்ஸ் .. என்னதான் இரசிக்க வேண்டிய Content இருந்தாலும் கொஞ்சம் மார்க்கெட்டிங் தேவைப்படுது ... :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 8:47:00 PM

நன்றி டிரீம்ஸ் :-) .. இப்படி இரசிக்கும் வாசகர்கள் கிடைத்தால் அடுத்த பதிவுகள் போடுவதற்கு உற்சாகமாய் இருக்கு

சரி சி.வி.ர் கேட்ட கேள்விக்கான பதிலை முயற்சித்துப்பாருங்கலேன்

துளசி கோபால் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 4:25:00 AM

அருமை. அருமையிலும் அருமை.

நம்மகிட்டேயும் நிறையப்படங்கள் இருக்கு. ஆனா நீங்க சொன்னதை வச்சு இப்பத்தான் கவனிக்கணும்.

எல்லாம் கோபால் அங்கே போனப்ப எடுத்தவைகள்தான்.

நானும் மேலோட்டமாத்தான் பார்த்தேன்(-:

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 4:34:00 AM

ரொம்ப நன்றி டீச்சர் ... :-) உங்க கிட்ட இருக்கும் படங்களையும் பகிர்ந்துகொங்க , அது எவ்வளவு முந்தைய படங்கள் ? கால வித்தியாசம் இருந்தால் அதைக்கான ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன் ..

புகைப்படத்தில் கூர்ந்து கவனிக்க இயலா விஷயங்கள் இவை என்பது ஏன் எண்ணம் .. அல்லது என் பயணத்திற்கான ஒரு சாக்கு :-த !!!!!!

jeevagv சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:54:00 AM

//ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..//
கற்கள் செங்கல் போன்று தோன்றுகின்றன...! கயிலை மலையில் செவ்வக செங்கலா என வியக்க வைக்கிறது.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 7:25:00 AM

@ஜீவா:
:-)))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 14, 2007 7:21:00 AM

//சி.வி.ர்... நல்ல கேள்வி .. உங்கள் கேள்வி-க்கு அளித்த பதிலை .. அதற்கான பதிவு வரும்போது மற்றவர்களுக்கும் விளக்கலாமா ?//

சிவிஆர் நண்பர் தான் என்றாலும் அவரிடம் நான் பிட் அடிக்க வில்லை! :-)
இதோ என் பதில், இலக்கிய நோக்கில் இருந்து!

சிவபிரான் தன் வலக்கால் நுனிவிரல் ஒன்றினாலேயே மலையை அழுத்துகிறார். இயல்பாக ஒரு பக்கம் அழுத்தினால் என்ன ஆகும்? அதன் எதிர் பக்கம் தூக்கிக் கொள்ளும்!

இராவணன் கதியும் இதே தான்! ஏற்கனவே தன் முயற்சியில் மிகவும் சிரமப்பட்டுப் போயிருக்கும் அவன், இன்னும் பாரம் தாங்காமல் திக்கு முக்காடிப் போகிறான். முன் தலையும் சுழன்று பின்பக்கம் வந்து விட்டது...

அப்போது கூட அவனுக்கு இயல்பாக இருக்கும் கர்வம் போகவில்லை. மேலே சிவன் அழுத்துகிறார் என்று இவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை!

எதிர்ப்பக்கம் தூக்கிக் கொள்ளவே, ஏதோ தன் முயற்சியால் இப்போதாவது இறுதியாக ஆட்டம் காண ஆரம்பித்து விட்டதே என்றே எண்ணிக் கொள்கிறான்.

அதனால் இதை இன்னும் முட்டுக் கொடுத்து, எப்படியாவது தலையால் தூக்கி எறியவே அவன் மனம் அப்போதும் முற்படுகிறது.
கைகள் எல்லாம் வேறு ஒன்றைப் பிடித்துக் கொண்டு இருக்கு! அவனிடம் ஃப்ரீயா இருப்பது தலை மட்டுமே!
அதனால் தான் அவன் தலையும் இடப் பக்கம் சாய்கிறது!
இடப் பக்கம் சாயும் கடைசி முயற்சி அது!...

மேலே இடப்பக்கம் இருக்கும் உமையன்னையும் (வாம பாகம் என்பார்கள்) இந்தத் திடீர் இடப் பக்கம் தூக்கிக் கொள்வதால் அஞ்சி எழ, அடுத்து மொத்த மலையின் பாரமும் இவன் தலையில் வந்து விழுகிறது!

தலைக்கனம்-னு சொல்லுவாய்ங்களே அது! தலைக்கனத்தால், தலை கனக்க ஆரம்பித்து விடுகிறது!
அதன் பின் தான் வலியில் கொஞ்சமாவது மதி வந்து, சாம கானம் பாடத் துவங்குகிறான்!

இது தான் இடப் பக்க இரகசியம்! :-)
இது கம்பரின் சொற் சித்திரத்தில் உள்ளது! அதை எல்லோராவில் கற் சித்திரத்தில் காண்கிறோம்!

Motion Picture போல் அல்லவா வடிச்சி வச்சிருக்காங்க நம்ம சிற்பிகள்!
கேள்வி கேட்டவருக்கும், படம் பிடித்தவருக்கும் நன்றிப்பா! ஒரு நல்ல அசை படம் பார்த்த எஃபெக்டு! :-)

குமரன் (Kumaran) சொன்னது… @ வெள்ளி, ஏப்ரல் 18, 2008 10:45:00 PM

இராவண கர்வ பங்க சிலையும் அதனை நன்கு கவனித்து கவனித்தவற்றைச் சொன்னது மிக நன்றாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:16:00 AM

KRS கலக்கிட்டீங்க.. அட்டகாச விளக்கம்

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:16:00 AM

நன்றி குமரன் :-) , கவனிக்க தவறிய சிலவற்றை பொறுமையாய் உடைந்த ஆங்கிலமும் ஹிந்தியுமாய் சொல்லிய அந்த வழிகாட்டிக்கும் நன்றி ..

கருத்துரையிடுக