யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 3

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க




பெரிய கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம், ஒரு அற்புதத்தை காண தயாராகுங்கள்


நம் முன்னோரின் அறிவியல்/கட்டிடத்திறன் உலகப் புகழ் பரப்பும் தஞ்சை பெரிய கோபுரம். இதன் உச்சியில் இருப்பது 80 டன் எடையளவு கொண்ட இரு கற்கள் (40+41), இதை எந்த தொழில்நுட்பம் கொண்டு 150 அடிகளுக்கு மேல் கொண்டு சென்றார்கள், எப்படி உச்சியில் வைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலே இந்த கோவில் முழுவது கிரானைட் எனப்படும் கடின பாறையினால் ஆனது, தற்போதைய காலத்திலேயே, 50 டன் அளவுள்ள ஒரே கிரானைட் கல்லை உடைத்து செதுக்குவதற்கு பல நாட்களும், பெறும் முயற்சியும் தேவை, இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...


தஞ்சை கோவிலின் புகழ் பெற்ற ஒரு கோணம், அந்தி மயங்கும் மாலை வேளையில்.


நவக்கிரகங்கள் லிங்கங்களாய், இதில் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை, ஆனால் இதிலிருந்த ஓளி அமைப்பில் ஒரு இனம் புரியாத உணர்வு...


கோவில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், இதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என நினைக்கின்றேன், நாம் கோவில்களை ஆன்மீக தளங்களாய் மட்டுமே பார்க்கின்றோம் :-( , இதில் பொதிந்து இருக்கும் அறிவியல் திறன், கலைத்திறன் என எப்போது நம் தலைமுறையிடம் சுட்டுக்காட்ட பழகப்போகின்றோம் ?


ஒற்றைக்கல்லினால் ஆன பிரமாண்ட நந்தி, இதை செதுக்கும் போது தவறிழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ?!?! இது என்ன காகிதமா அழித்து விட்டு முதலிலிருந்து தொடங்க ?!


கோவிலின் முன்புறமிருந்து


காணக்கிடைத்த பொம்மலாட்டம்

நந்தியின் பின்புறம். (நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)

22 மறுமொழிகள்:

CVR சொன்னது… @ வியாழன், மே 10, 2007 9:07:00 AM

இந்த பதிவுத்தொடரில் வரும் படங்கள் அனைத்தும் அருமை!!

வாழ்த்துக்கள்!! :-)

வடுவூர் குமார் சொன்னது… @ வியாழன், மே 10, 2007 10:32:00 AM

எங்களுக்காக இவ்வளவு நேரம் இருந்து படம் எடுத்தீர்களே அதைச் சொல்லனும்.
நன்றி பல.

தென்றல் சொன்னது… @ வியாழன், மே 10, 2007 7:01:00 PM

அருமையான படங்கள்... கருத்துக்கள்! நன்றி!!

/இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...
/
ஆமாங்க... இப்படி பல ஆச்சிரியங்கள் நிறைந்துள்ளது..

நம்மகிட்ட இருக்கிற பல விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்களை எப்ப மதிக்க கத்துக்க போறோமோ?

அடுத்துவரும் தலை முறைகளுக்கு இதன் முக்கியதுவத்தை எவ்வாறு விட்டு சொல்ல போகிறோம்..?

கதிரவன் சொன்னது… @ வியாழன், மே 10, 2007 8:35:00 PM

நல்ல கட்டுரை; அருமையான படங்கள் ! வாழ்த்துக்கள் & நன்றி யாத்ரீகன்

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 11, 2007 12:44:00 AM

@வடுவூர் குமார் :வருகைக்கு நன்றி குமார், கட்டிட பொறியாளர் நீங்கள் எங்கள் கேள்விகளூக்கு சுவாரசியாமாய் கற்பனை செய்து ஒரு கதை அல்லது பதில் சொல்லுங்களேன் !!!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 11, 2007 12:49:00 AM

முதல் முறை வருகைக்கு நன்றி தென்றல்..

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 11, 2007 12:49:00 AM

முதல் முறை வருகைக்கு , வாழ்த்துக்களுக்கு நன்றி கதிரவன்

வடுவூர் குமார் சொன்னது… @ வெள்ளி, மே 11, 2007 7:01:00 AM

யாத்ரீகன்
இதைப்பற்றி முன்பொரு முறை நேஷனல் ஜியாகரபியில் விபரமாக காண்பித்தார்கள்.கிளைடர் மூலம் எடுத்த வீடியோக்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மரங்களின் தன்மை கொண்டு ஏறு நடைப்பாதை கட்டி அதன் மீது கல்லைக்கொண்டு போனார்கள் என்று சொல்லியிருந்தார்கள்.அருமையான ஆராய்சியாக இருந்தது அந்த வீடியோ.
எங்காவது அகப்பட்டால் சொல்கிறேன்.
உங்கள் பதிவுக்கு திரும்ப வந்து பார்த்ததால் நீங்கள் கேட்ட கேள்வி தெரிந்தது.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மே 11, 2007 11:20:00 PM

@குமார்:
அந்த அருமையான ஆவரணப்படத்தை தவறவிடுவேனா !!! பார்த்தேன், நன்றாய் ஆராய்ந்திருந்தார்கள், ஆனாலும் எங்கள் கேள்விகளான, எங்கிருந்து ஆரம்பித்திருபார்கள் போன்ற பார்வையில் பதில் இல்லையே அதிலே..

எல்லா பதிவுகளுக்கும் வந்து மட்டுமில்லாமல், உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி குமார்!!!!

Maayaa சொன்னது… @ வெள்ளி, ஜூன் 15, 2007 11:25:00 AM

yeh beautiful nandhi..
but do u know that the nandhi was built in the later period and not in rajaraja's reign..

வவ்வால் சொன்னது… @ சனி, ஜூன் 16, 2007 2:38:00 AM

வணக்கம் யாத்திரிகன்,

அந்த பெரிய கற்களை கோபுர உச்சிக்கு கொண்டு செல்ல 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்திலிருந்து சரிவான சாரம் கட்டியதாக சொல்வார்கள் அந்த இடத்திற்கு சாரப்பள்ளம் என்ற பெயர் ,இன்றும் அந்த பெயரில் தஞ்சை அருகே ஒரு ஊர் உள்ளது.

தஞ்சை வண்டல் மண் பகுதி அங்கே கருங்கல் மருந்துக்கும் கிடையாது, தேவையான கற்கள் எல்லாம் திருச்சி,திருவண்ணாமலை,பகுதி மலைகளில் இருந்து உருண்டை/உருளை வடிவில் வெட்டப்பட்டு யானைகளைக் கொண்டு உருட்டிக்கொண்டே தஞ்சைக்கு கொண்டு சென்றதாக படித்தேன்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் , ஒரு பெரிய கல் சதுர அளவில் வேண்டும் என்றால் அதனை விட பெரிய உருளை கல் வெட்டப்பட வேண்டும். எத்தனை உழைப்பு பாருங்கள்.

குசும்பன் சொன்னது… @ சனி, ஜூன் 16, 2007 11:14:00 PM

அருமையான பதிவு

பெறிய கோவிலில் இருக்கும் முருகன் சந்தி மிகுந்த கலை நயத்துடன்
கட்ட பட்டு இருக்கும் அது ராஜ ராஜ சோழனுக்கு பிறகு கட்டியதாக
கேள்வி..., அந்த கோயிலில் பின் புறம் பூ போன்ற வேலை பாடு
தொடராக இருக்கும் அதில் சிறு துளை எல்லா இடத்திலும் இருக்கும்,
அந்த ஓட்டையின் அளவு ஒரு நூலின் அளவே இருக்கும் அதற்க்கு
மேல் மொத்தமாக இருக்கும் பொருளை விட்டால் வெளியே வராது.
ஒரு முடியின் அளவே இருக்கும் ஓட்டையை எப்படி பாறையில்
தெடர்ந்து போட்டு இருப்பார்கள் அதை கவனித்தீர்களா?

கோபுரதில் உள்ள ஒவ்வொரு அடுக்குகளில் மிகுந்த வேலை பாடுகள்
அடங்கிய சிற்பங்கள் இருக்கின்றன அதை பார்க்க "அரசியல் புள்ளிகளின்"
சிவாரிசு தேவை!

குசும்பன் சொன்னது… @ சனி, ஜூன் 16, 2007 11:38:00 PM

நுழைவாயில் ஒரு சுவாரஸ்யமான சிலை...கண்டீர்களா

நுழைவாயிலில் இருக்கும் மிகப் பெறிய காவல் தெய்வங்களின் கையில் ஒரு பெறிய ஆயுதம் இருக்கும் அதில் ஒரு பாம்பு சுற்றி இருப்பது போல் செதுக்க பட்டு இருக்கும், அந்த பாம்பு வாயில் ஒரு யானை மாட்டி இருப்பது போல் இருக்கும் அதற்க்கு ஒரு
காரணம் உண்டு..

சிற்பியிடம் ராஜ ராஜ சோழன் இதுபோல் செய்ய சொன்னாராம்..
சிற்ப்பி செய்து முடித்த பின் ஏன் இது போல் செய்ய சொன்னீர்கள்
என்று கேட்டதற்க்கு...ராஜ ராஜ சோழன் நான் எதிர் பார்த்த அளவுக்கு
கோவில் பெறியதாக இல்லை என்றாராம்..அதற்க்காக தான் இப்படி
ஒரு வாயில் காப்பாளனை செதுக்க சொன்னேன் என்றதற்க்கு

சிற்ப்பி புரியாமல் முழிக்க..

ராஜ ராஜ சோழன்...

விலங்குகளில் பெறியது யானை...அந்த யானையையே வாயில்
கவ்வி பிடிக்க வேண்டுமானால் அந்த பாம்பு எவ்வளவு பெறிதாக
இருக்க வேண்டும், அத்தனை பெறிய பாம்பு ஒரு கம்பில் சுற்றி
இருக்கிறது என்றால் அந்த கம்பு(ஆயுதம்) எத்துனை பெறிதாக
இருக்கவேண்டும், அதனை பெறிய கம்பை கையில் ஒருவன் தாங்கி
பிடித்திருக்கிறான் என்றால் அவன் எத்தனை பெறியவனாக இருக்கவேண்டும்..

சிற்ப்பி ஆம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெறியவானக அவன் இருக்கவேண்டும்...

ராஜ ராஜ சோழன் அத்தனை பெறிய ஆளே வாயில் காப்பானாக நிற்க்கிறான் என்றால் உள் ராஜ கோபுரம் எத்தனை பெறிதாக இருக்கவேண்டும் ...அத்தனை பெறிய கோபுறத்தைதான் நான் கட்ட ஆசைபட்டேன் அதை உணர்த்த தான் இந்த சிற்ப்பம் என்றார் என்று
ஒரு விளக்கம் உண்டு..

அன்புடன்
குசும்பன்

Maayaa சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 17, 2007 9:55:00 PM

navagraha lingangala physical features vechu differentiate panni irupaanga!!

sila planets are tall others are noticeable short.. some are fair in complexion.. others are well-rounded in shapes. but adha lingamaa panni differentiate pannadhu avanga intelligenceaa kaatudhu!!!
chance illa la!!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 18, 2007 11:24:00 PM

@ப்ரியா:
ஓ !!! அப்படியா.. புது தகவலாய் இருக்குதே !!!! பின் அவர் மகனால் கட்டப்பட்டதா ?!?!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 18, 2007 11:53:00 PM

@வவ்வால்:
தகவல்கள்கள் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.. , பல நாட்கள் ஆசைப்பட்டிருந்த இந்த பயணத்திற்கு முன் பல தகவல்கள் சேகரித்து சென்றிருந்தது நல்லதாய்ப்போனது..

டிஸ்கவரிசேனலின் ஒரு ஆவணப்படம் ஒன்றில் அந்த சாரப்பள்ளம் என்கின்ற இடத்தை வைத்து இன்னொரு கருத்து ஒன்று.. அங்கிருந்து சாரம் வரும்பொழுது அந்த வழியில் கோபுரம் ஏது அந்த திசையில் இருக்காது கோவிலில்..

அதே ஆவணப்படத்தில் கற்களை முக்கியமாய் கோபுரத்தின் மேலுள்ள 81 டன் இரு கற்களை எப்படி மேலே கொண்டு சென்றிருப்பார்கள் என்று ஒரு செய்முறை செய்திருப்பார்கள், அதில் யானைகளை வைத்து, மரங்களை உருளைகளாய் வைத்து இழுத்து தள்ளி செல்வது என..

ஆம் நீங்கள் சொல்வது போல் இருந்தால் மாபெரும் வேலைகள்தான்..!!!!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 22, 2007 12:53:00 AM

@குசும்பன்:
ஆமாம் குசும்பன், அந்த வேலைப்பாட்டை கவனித்தோம், இதைப்போன்றே மிக நுணுக்கமான சிறு துளைகள் கொண்டது போல் உள்ள வேலைப்பாடு ஒரிஸாவிலுள்ள கோவில்கள், முக்கியமாய் கோனார்க் மற்றும் பூரி ஜெகனாத் கோவில்கள்...

ஒ !!!! ஆனால் அரசியல் புள்ளிகள் சிபாரிசு பெறும் நிலையில் உள்ளோர் அதை அவ்வளவு நுணுக்கமாய் கவனிக்கும் சிந்தனை பெற்றவர்களாய் இருப்பார்களா ? ;-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 22, 2007 12:56:00 AM

@குசும்பன்:
கற்பனையா உண்மையா என்று தெரியாது, ஆனால் நிகழ்ந்தாலும் நிகழ்ந்திருக்கும் :-) ... தஞ்சை கோவில்களில் இயல்பாகவே துவாரகபாலகர்கள் சிலைகள் மிகப்பிரமாண்டமாய் இருந்தது.. நீங்கள் குறிப்பிட்ட சிலையை சரியாய் கவனிக்க தவறிவிட்டோம் என நினைக்கிறேன்..!!! :-(

SUNSHINE... சொன்னது… @ திங்கள், ஜூலை 16, 2007 1:16:00 PM

Loved the pics...You have done justice to it by capturing it in a beautiful way.

Unknown சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 14, 2007 1:55:00 AM

நான் இங்கே தாமதமாக வந்திருக்கிறேன் :-(
அருமையான பதிவு, அழகான படங்கள் :-)

//(நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)//

சிதம்பரம் நடராஜர் கோயில் :-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 14, 2007 2:04:00 AM

நன்றி Sunshine .. Thank You :-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 14, 2007 2:06:00 AM

:-) நன்றி பூங்கி .. இப்பொழுது பதிந்திருக்கும் எல்லோரா பற்றிய பயணத்தொடரும் உங்கள் கருத்தைக்கவரும் என என்னைக்கின்றேன் ...

ஒ !!! சிதம்பரம் கோயிலா .. ஹ்ம்ம்ம்ம்ம்..

கருத்துரையிடுக